இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு உதவியளிப்பதற்காக ஜெனிவா சென்றுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இலங்கையின் ஐக்கியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தால், அவர்கள் நாடு திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்ய அரசாங்கம் ரகசிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் அமைப்பின் 6வது திருத்தச் சட்டத்திற்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட உள்ளனர். இலங்கையில் தனிநாடு ஒன்றை ஏற்படுத்த உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் உதவிகளை செய்தல், நிதியுதவியளித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் 7 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்படும். அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக