புதன், 24 ஏப்ரல், 2013

60 மில்லியன் ரூபா வைப்புடன் யாழில் இயங்கிய சப்ரா அன்கோ மூடப்பட்டமை குறித்து விசாரணை?

60 மில்லியன் ரூபா வைப்புடன் யாழில் இயங்கிய சப்ரா அன்கோ மூடப்பட்டமை குறித்து விசாரணை?விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய சப்ரா அன்கோ என்ற 60 மில்லியன் ரூபா வைப்புகளை கொண்டிருந்த நிததி நிறுவனம் மூடப்பட்ட சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

இந்த நிதி நிறுவனத்தில் ஓய்வுபெற்றவர்களின் பணமே வைப்பு செய்யப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.1993 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்டதுடன், அதில் பணத்தை வைப்புச் செய்தவர்களுக்கு அந்த பணம் மீள கொடுக்கப்படவில்லை. பணத்தை வைப்பிலிட்டவர்கள் நிறுவனத்தின் நிருவாகிகள் மீது கொண்டிருந்த அச்சம் காரணமாக அது குறித்து அரசாங்கத்திற்கோ, இலங்கை மத்திய வங்கிக்கோ முறைப்பாடு செய்யவில்லை என தெரியவருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக