புதன், 17 ஏப்ரல், 2013

பெங்களூரில் பாரதீய ஜனதா க ட்சியின் அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு 8 போலீசார் உட்பட 13 பேர் காயம்

பெங்களூரில் பாரதீய ஜனதா க ட்சியின் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 8 போலீசார் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

பெங்களூரில் பாரதீய ஜனதா க ட்சியின் அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு 8  போலீசார்  உட்பட 13 பேர் காயம்குண்டு வெடித்ததில் 3 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. கர்நாடகா மாநில சட்டசபைக்கான தேர்தல் மே 5ம் திகதி நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இதனால் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர் பொலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென பாஜக அலுவலகத்துக்கு வெளியே பெரும் வெடிச் சப்தம் கேட்டது. இதனால் அங்கிருந்தோர் சிதறி ஓடினர். முதலில் ஒரு காரில் கேஸ் சிலிண்டர் மாற்றும் போது அது வெடித்ததாகக் கருதப்பட்டது.

ஆனால், பின்னர் வெடித்தது வெடிகுண்டு என்று தெரியவந்தது. இந்த குண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. குண்டு வெடித்தவுடன் அருகில் இருந்த 3 கார்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதையடுத்து அப்பகுதிக்கு தீயணைப்புப் படையினர் உடனே விரைந்து எரிந்து கொண்டிருந்த வாகனங்களின் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வாகனங்கள் முழுவதும் எரிந்து போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக