நாட்டு மக்களின் நன்மையை கருதியாவது அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கத்திடம் உரிய திட்டங்கள் எவையும் இல்லை என்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவித் தொகை 20 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மாநாட்டு தீர்மானத்திற்கும் இதற்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில், இலங்கைக்கு எதிரான வெளிநாடுகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன பதில் வழங்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டு மக்களின் நன்மையை கருதியாவது அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
புதன், 17 ஏப்ரல், 2013
நாட்டு மக்களின் நன்மையை கருதியாவது அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்
நாட்டு மக்களின் நன்மையை கருதியாவது அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கத்திடம் உரிய திட்டங்கள் எவையும் இல்லை என்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவித் தொகை 20 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மாநாட்டு தீர்மானத்திற்கும் இதற்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில், இலங்கைக்கு எதிரான வெளிநாடுகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன பதில் வழங்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டு மக்களின் நன்மையை கருதியாவது அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக