வெள்ளி, 19 ஏப்ரல், 2013

யாழில் ஆயுத குழு செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு எதுவுமே தெரியாது! - ஜிப்ரிApril 19, 2013 12:18 pm

யாழில் ஆயுத குழு செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு எதுவுமே தெரியாது! - ஜிப்ரியாழ். குடாநாட்டில் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் பற்றி பொலிஸாருக்கு எதுவும் தெரியாது எனவும் பொலிஸார் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை அது பொலிஸாரின் வேலையும் இல்லை என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இருக்கின்றார்களா? அவர்களை பொலிஸார் இனம் கண்டுள்ளனரா? ஏன் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது என யாழ். சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் உட்புகுந்ததும் ஒரு ஆயுததாரிகள் தான் ஆனால் அவர்கள் எங்கிருந்து செயற்படுகின்றார்கள் என்ற செய்கின்றார்கள் என்பது பற்றி அறிய வேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை பொலிஸார் முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆயுததாரிகளுக்கு பின்னால் நாங்கள் திரிய முடியாது என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக