ஆனையிறவில் மீண்டும் சிங்களப் படையினரின் சோதனை சாவடி
ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏ9 வீதி ஊடாகக் குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பஸ்கள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன.கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும், தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பயணிகள் அனைவரும் வயது வேறுபாடின்றி இறக்கப்பட்டு முழுமையான வாகனச் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் பயணிகளின் பொதிகளும் கடுமையாகச் சோதனையிடப்படுகின்றன.இதனால் தூர இடங்களில் இருந்து வரும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக