45 வயதான சரத் மாரகொட என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சிசிலி தீவின் கெட்டேனியாவில் வசித்துவரும் 42 வயதான மதுரி வர்ணகுல என்ற பெண் அவரது கணவரான சரத் மாரகொட என்பவரால் கொலை செய்யப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் கணுக்கால் பகுதியைச் சுற்றி கயிறு இறுகிய அடையாளம் காணப்படுவதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியை கொன்ற நபர் ஆதாரங்களை அழிக்க மனைவியை தீயிட்டு எரிக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தம்பதியினருக்கு 8 வயது மகன் ஒருவர் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக