செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தும்!- சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முற்பட்டால், அரசாங்கம் சட்டப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மன்னார் மாவட்ட கத்தோலிக்க பேராயரை அண்மையில் சந்தித்த சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் போராட்டக் குழுக்களும் காணப்படுகின்றன.இந்த நிலையில் அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முற்படும் போது, முன்னாள் போராட்டக் குழுக்களின் செயற்பாடுகளின் பதிவுகளை வைத்துள்ள அரசாங்கம் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக