தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்ல முற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி யாரும் உட்செல்ல முடியாது என இராணுவ பொலிசாரினால் வெளியேற்றப்பட்டனர்.
வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் இன்றைய தினம் யாழ் சென்றிருந்தனர். இக் குழுவினர் மாலை 6 மணியளவில் தெல்லிப்பளையில் உள்ள உயர் பாதுக்காப்பு வலயம் என பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள பிரதேசத்தினுள் உட்செல்ல முற்பட்ட வேளையிலேயே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி யாரும் உட்செல்ல முடியாது என கூறி இராணுவ பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர். உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பிரதேசம் என இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட 6,500 ஏக்கர் நிலப்பரப்பு தொடர்பில் நேரில் சென்று பார்வையிட முற்பட்டவேளையே அவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக