வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டணி சேரப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். சென்னைக்கு விஜயம் செய்திருந்த காரணத்தினால் தம்மால் அண்மையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தில் இணைந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். யுத்தகாலத்தைப்போன்று தற்போதும் காணாமல் போதல் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனோர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பண்டிவிரிச்சான் பகுதியில் புதிதாக மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தங்களது இருப்பிடம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடுகள் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக