பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து குறித்து விவாதம் செய்யப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ம் திகதி லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.எனவே, எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்புரிமையை இலங்கை இழக்கக் கூடிய சந்தர்ப்பம் எதுவும் உருவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும், பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் வேறும் விடயங்கள் என்ற அடிப்படையில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்படக் கூடுமென சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக