காணிகளை படைத்தரப்பிற்கு சுவீகரிக்கும் நடவடிக்கையினை தனிப்பட்ட ரீதியில் வன்மையாக கண்டிக்கிறேன்'
நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழத்தொடங்கியுள்ள நிலையில் தமிழ் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து யாழ்;.மாவட்ட காணி மற்றும் காணி சுவீகரிப்பு அதிகாரி தனது சுவீகரிப்பு அதிகாரி பதவியை ராஜினாமாச்செய்து வெளியேறுகின்றார்.
சுமார் ஒரு மாத கால அவகாசத்தினுள் மாற்று ஏற்பாடுகளை செய்ய ஆலோசனை வழங்கி தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தாம் ஆசை காட்டி ஏமாற்றப்பட்டே இப்பதவிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக கவலை வெளியிட்டுள்ள அவர் தமிழ் மக்களது காணிகளை படைத்தரப்பிற்கு சுவீகரிக்கும் நடவடிக்கையினை தான் தனிப்பட்ட ரீதியில் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருப்பதாக காணி அலுவலகம் திறக்கப்பட்ட வேளை தாம் மகிழ்வுடன் வரவேற்றதாக தெரிவித்த சிவசுவாமி ஆனால் அது இராணுவத்திற்கு காணி பிடிக்கும் நோக்கத்துடனேயே இருப்பதாக பின்னரே அறிந்து கவலை தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளரான சிவசுவாமி அதற்கு முன்னதாக யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராகவும் பணியாற்றியிருந்தார். மிகவும் எளிமையான நபரான அவர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தம்மீதான குற்றச்சாட்டுக்களால் அதிர்ந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் வெறுமனே கருவியாக்கப்பட்டுள்ளதாக கவலை கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக