வியாழன், 18 ஏப்ரல், 2013

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை கைது செய்யுமாறு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரபை கைது செய்யுமாறு இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை கைது செய்யுமாறு உத்தரவு பேர்வேஸ் முஷாரப் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸீர் பூட்டோ கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பேர்வேஸ் முஷாரப் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த இவர் கடந்த மாதம் மீண்டும் நாடு திரும்பினார்.

நாடு திரும்பிய பேர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக