செவ்வாய், 28 மே, 2013

நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம்

News Serviceஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்றே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 23 வது ஒழுங்குமுறை அமர்வின்போது இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விஜயம், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உந்துதலை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் நவநீதம்பிள்ளையின் விஜயம் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையில் நற்புறவு ஏற்படும் என்றும் ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக