செவ்வாய், 28 மே, 2013

நாடாளுமன்றத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும்

News Service13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாடாளுமன்றத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என ரொலொ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய தனிப்பட்ட நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார். இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றை புறக்கணிக்க நேரிடும். இது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக