புதன், 15 மே, 2013

கச்சதீவில் 5ஆயிரம் பேருடன் குடியேறுவேன்- பலவந்தமாக திணிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது

கச்சதீவில் 5ஆயிரம் பேருடன் குடியேறுவேன்- பலவந்தமாக திணிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாதுகாணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும் எனவும் இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும் என இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்பதால் அதற்கு எதிராக தேசப்பற்றாளர்களை அணித்திரட்ட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு, மக்களின் பணத்தில் வாழும், அமைச்சர்கள் டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தேசத்துரோகிகளாக வடக்கில் தேர்தலை நடத்தி, அதிகாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்படுவதற்கு முன்னர், வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அரசாங்கம் உறுதி வழங்கியதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக 05 ஆயிரம் பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போவதாகவும் தேரர் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக