அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்படவுள்ளது. கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய பூரண அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.இதற்கென பாராளுமன்றில் விசேட சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய சட்ட மூலத்திற்கான அனுமதி அமைச்சரவையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சுக்களில் கடயைமாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பரிந்துரைகளை செய்யவும் இந்த சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தக் கூடிய வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக