புதன், 22 மே, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் - TNAஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை யதார்த்தமான முறையில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளினால் வடக்கு கிழக்கில் மனித உரிமை நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் நல்லிணக்கத்தையும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தலையும் மேற்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக