வியாழன், 23 மே, 2013

யாழில் வெசாக்தின கொண்டாட்டத்திற்காக இராணுவத்தினரால் அலங்கரிக்கப்படும் வீதிகள்

யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் பொது நூலக வீதி, திறந்தவெளி அரங்க வளாகம் என்பவற்றில் பிரமாண்டமான பந்தல்கள், தோரணங்கள், வெளிச்சக்கூடுகள், அமைக்கும் பணிகள் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் வெசாக் தின அலங்கரிப்பு வேலைகளில் தேர்ச்சி பெற்ற தென்னிலங்கைத் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். வெசாக் வாரத்தில் அலங்காரங்கள், விசேட காட்சிப்படுத்தல்கள் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக