இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமைச்சர் ப்ரெண்டன் ஓ கோனர் இன்று இலங்கை செல்கிறார்.
சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் கடற்பயணங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படடும் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையுடனான நல்லுறவை வலுப்படுத்தும் ஒரு பயணமாகவும் இந்த விஜயம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் 42 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி வரையில் 1,071 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 862 பேர் வலுக்கட்டாயமாக அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக