தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குள் இன்று (01.05.13) நான்கு மணியளிவில் சென்ற முகமூடி அணிந்த நான்கு நபர்கள் அங்கிருந்த உதவியாளரிடம் கஜேந்திரகுமார் எங்கே என்று விசாரித்து அச்சுறுத்தியுள்ளனர். அவ்வேளையில் அவர் வெளியே சென்றுள்ளதாக உதவியாளர் கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை குறித்த நபர்கள் படம்பிடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் தம்மை பிறர் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் மழையங்கி மற்றும் தலைக்கவசம் அணிந்தவாறு தமது வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு நடந்தே வீட்டிற்குச் சென்றுள்ளனர். குறித்த நபர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து வடமராட்சியில் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக