முஸ்லிம் தமிழ் தேசிய ஐக்கிய ஒன்றியத்தின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுப் பிரிவினர் அசாத் சாலியை சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.
அசாத் சாலியை கொலன்னாவையில் அமைந்துள்ள வீட்டில் வைத்து கைது செய்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
எனினும், எவ்வாறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக