விரைவில் நடக்கவுள்ள வட மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்ற உறுதிமொழியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொடுக்க மறுத்ததை தொடர்ந்து தேசிய பிரச்சினை தொடர்பில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. தமது கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்து விட்டு தேசிய பிரச்சினை தொடர்பாக ஒரு பொது கொள்கையை வகுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளை சிவில் சமூக ஆர்வலர்கள் கேட்டதன் பின் சில நாட்களில் இவர்களுடைய பேச்சு இவ்வாறு தோல்வியில் முடிவடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவொன்று இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது. தாங்கள் தேசிய பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை முன்வைத்தோம். எனினும் வரவுள்ள வட மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்காவிடின் இதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். பதிலுக்கு எம்மை ஒரு சுயேட்சை குழுவின் பிரதிநிதிகளாக தேர்தலில் போட்டியிடுமாறு அவர் எம்மிடம் கூறினார். நாம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக