வட மாகாணசபைத் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணக்கார தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தும் அரசாங்கத்தின் திட்டங்களில் மாற்றமில்லை. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கீழே காணப்படுகின்றன. மாகாணசபைகளுக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும், இது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த தடையாக அமையாது. வட மாகணசபை தேர்தலுடன் மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக