வெள்ளி, 17 மே, 2013

புலிப்போராளிகளுக்கு சிறைத்தண்டனை! தலைவர்களுக்கு சலுகை! இது தான் இலங்கையின் ஜனநாயகம் - ஜே.வி.பி.

News Serviceதயா மாஸ்ட்டரால் உறுதிப்படுத்தப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தவர் சிறையில் உள்ள அதே நேரம், தயா மாஸ்ட்டர் சுதந்திரமாக வாழ்வதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமக்கு வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்ய கிடைத்ததாகவும், இதன் போது சந்தித்த தமிழ் கைதி ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடையாள அட்டையை கொண்டிருந்தமைக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அவரது அடையாள அட்டை விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த தயாமாஸ்ட்டரினால் கைச்சாத்திடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை வைத்திருந்தவர் சிறையிலும், அதனை உறுதிப்படுத்திய தலைவர் வெளியிலும் இருப்பதுதான் இலங்கையின் ஜனநாயகம் என்று அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக