அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த ஆளும் கட்சியின் நகரசபைத் தலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார். கடுவல நகரசபையின் தலைவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இந்தப் போராட்டத்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது விமல் வீரவன்ச, தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தார் என நகரசபையின் தலைவர் புத்ததாச தெரிவித்துள்ளார். அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வெள்ளி, 17 மே, 2013
விமல் வீரவன்சவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!
அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த ஆளும் கட்சியின் நகரசபைத் தலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார். கடுவல நகரசபையின் தலைவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இந்தப் போராட்டத்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது விமல் வீரவன்ச, தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தார் என நகரசபையின் தலைவர் புத்ததாச தெரிவித்துள்ளார். அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக