செவ்வாய், 14 மே, 2013

வடக்கில் முன்னாள் போராளிகளை சுயேச்சையாகக் களமிறக்கும் அரசு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்க திட்டம்

வடமாகாணசபைத் தேர்தல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாக களமிறக்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. என அறியமுடிகின்றது. இவ்விவகாரம் சம்பந்தமான ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் சாதகமாக முடிவடைந்துள்ளன எனவும் தெரிய வருகின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கைப் படையினரிடம் சரணடைந்து -அதன் பின்னர் புணர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலரே வடக்குத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படவுள்ளனர்.

வடக்குத் தேர்தலில் ,தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சென்றடைவதைச் சிதறடிக்கும் வகையிலேயே அரசு இந்த யுத்தியைக் கையாளவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய புள்ளிகளாகத் திகழ்ந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் , தயாமாஸ்டர் ஆகியோரும் வடக்குத் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகின்றது.
எனினும் இவர்கள் போட்டியிடும் பட்டசத்தில் அரச தரப்பு பட்டியலிலேயே களமிறங்குவார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது. அதேவேளை ,வடமாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரைவில் தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு கட்டளை பிறப்பிக்கவுள்ளார்.

1988ம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல் சட்டத்தின் 10 [1] உப பிரிவுக்கமைய ஏதேனுமொரு மாகாணத்திற்கு முதல் முதலாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் போது அத்தகைய தேர்தலொன்றை நடத்துமாறும் ஜனாதிபதி தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவொன்றை பிறப்பித்தல் வேண்டும். என்பது அவசியமாகும். இதன்படியே ஜனாதிபதியால் கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது.

மாகாணங்களுக்கு ஏற்கன்வே நடபெற்றிருந்தால் அவற்றின் பதவிக்காலம் முடிவடையும் போதும் ,அரசமைப்பின்படி ஆளுனர்,குறித்த ஆணையாளரால் தேர்தலுக்குச் செல்லமுடியும் என்பது குறிப்படத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக