உள்நாட்டு அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டு, செனல்-4 தொலைக்காட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்று வெளிநாடுகளுக்கு நிரூபிக்க அவர்கள் முற்படுகின்றனர்.
அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளிலேயே தங்கி இருப்பதற்காகவே புலம்பெயர்ந்த மக்கள் இவ்வாறு செய்கின்றனர். இல்லையெனின் அவர்கள் மீண்டும் நாடு திரும்பு அந்ததந்த நாட்டு அரசாங்கங்கள் வற்புறுத்தலாம் என்றும் இராணுவத்த தளபதி தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக