பாரிய விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் மேற்கொண்டவர்களை மறந்து விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு போராடிய அனைவருக்கும் நன்றி பாராட்ட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக