ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிகவும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினாலேயே பல்லின மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே, ஜனாதிபதியினால் இலகுவில் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட தருணத்தில் தம்மை விடுதலை செய்வதற்கு அர்ப்பணிப்புடன் முயற்சி மேற்கொண்ட ஆளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக