ஞாயிறு, 5 மே, 2013

அசாத் சாலி மீண்டும் இரகசிய பொலிஸ் வசம்

அசாத் சாலி மீண்டும் இரகசிய பொலிஸ் வசம்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அசாத் சாலி விசாரணைகளுக்கென மீண்டும் இரகசிய பொலிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேற்று (04) அசாத் சாலி வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி கடந்த 2ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதன் பின் உணவு உட்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்ததால் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டார்.

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டதாகக் கூறி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக