வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வுகூறியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் வடக்கில் நிச்சயமாக தேர்தல் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
எனவே, சவால் விடுத்ததனைத் போன்று விமல் வீரவன்ச ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி பதவி துறப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே தினக் கூட்டத்தில் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை அரசாங்கத்திற்கு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக