புதன், 1 மே, 2013

மலையகத்தில் மே தின ஊர்வலம், கூட்டங்கள் (படங்கள்) May 1, 2013 02:25 pm

ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரசின் மே தின கூட்டம் இன்று (01) காலை ஹட்டன் நகரில் நடைபெற்றது.

ஹட்டன் நகர மத்தியில் இருந்து ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தலைமையில் ஆரம்பித்த மே தின ஊர்வலம் கூட்ட மண்டபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கு கூட்டம் நடைபெற்றது.

இதில் இக்கட்சியின் மாகாண சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின கூட்டம் அதன் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலைமலையகத்தில் மே தின ஊர்வலம், கூட்டங்கள் (படங்கள்) யில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக்கூட்டம் இ.தொ.கா பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா மாநகரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டதையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமான், மாகாணசபை, நகரசபை பிரதேசசபை தலைவர்கள், உறுப்பினர்கள், இ.தொ.காவின் உயர் அதிகாரிகள், தோட்ட தலைவர்கள், தலைவிகள், உள்ளிட்ட பெருந்திரலான மக்கள் அணித்திரண்டு மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக