வெள்ளி, 24 ஜனவரி, 2014

சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்காக தாம் மன்னிப்பு கோரத் தயார்!- அமைச்சர் மேர்வின்

சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியமைக்காக வருந்துவதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோரத் தயார் எனவும் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் இழைத்த மிகப் பெரிய தவறுகளில் சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்காக தாம் மன்னிப்பு கோரத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் மீண்டும் இழைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கையின் முக்கிய ஊடக நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் அமைச்சர் மேர்வின் இந்தக் கருத்து குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும், ஊடக அமைப்புக்களும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக