வியாழன், 7 ஜூன், 2012

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை கோரும் ஓர் அவசரமான வேண்டுகோள்!

அன்பார்ந்த உறவுகளே!! நாளைய தினம் எம் இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் இன அழிப்புக் குற்றவாளி மகிந்த ராஜபக்ச புனித பாப்பரசரை வத்திக்கானில் சந்திக் போகின்றார்.இதனை வன்மையாக கண்டிக்கும் முகமாக அனைத்து தேசிய அமைப்புக்களின் அனுசரணையுடன் 4 அம்ச கோரிக்கைகள் உள்ளடக்கிய ஒரு மனு வத்திக்கான் அரச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்மனுவின் உள்ளடங்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
1) தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம் பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
2) பேராயர் இராயப்பு யோசேப்பின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் 1984ம் ஆண்டு முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட வண. பிதாக்களுக்கு நீதி கிடைத்தல்
3) இலங்கை அரசின் மதவாத அரசியல் கொள்ளை நிறுத்தப்படல் வேண்டும், மற்றும் ஏனைய மதங்களின் சுதந்திரத்தை உறுதி செய்தல்;
4) ஈழத்திழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் செய்த நபர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை மேற் கொள்ள அனைத்துலகத்திற்கு அழுத்தங்களை கொடுத்தல்.
இவை சம்மந்தமான மனுவானது இத்தாலி மொழியில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை காலத்தின் கட்டாயம் கருதி கீழ் கண்ட மின்னஞ்ஞல் முகவரி ஊடாகவும், தொலை நகல் மூலமாகவும் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்ஞல் முகவரிகள் :
vati023@genaff.segstat.va
cepsegreteria@evangel.va

அனுப்ப வேண்டிய தொலை நகல் முகவரிகள்:
0039-0669885088
0039-0669880118

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக