சனி, 1 செப்டம்பர், 2012

பிள்ளையானை வெற்றிபெற செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் ஜெயானந்தமூர்த்தி !


பிள்ளையானையும் கருணாவின் சகோதரியையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக லண்டனில் தற்போது இருக்கும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம் தனது மனைவியின் மைத்துனரான பிள்ளையானும், தனது ஊரைச்சேர்ந்த கருணாவின் சகோதரியும் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார். தற்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கபடப் பேச்சுக்களை நம்பி மக்கள் பிழையான வழியில் செல்லக் கூடாது. அதற்கான அறிவூட்டல்களை எனது மக்களுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கடமை என்பதை நான் உணர்கின்றேன் என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக