வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ராஜபக்சே சுதந்திர கட்சியினரால் திரிகோணமலை இந்து கோயில் இடித்துச் சேதம்!

!திரிகோணமலை மாவட்ட மூத்தூர் தொகுதியின் மீன்காமம் கிராமத்தில்
அமைந்திருக்கும் அபிராமி அம்மன் கோயில் சென்ற புதன்கிழமையன்று இடித்து
சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தீஞ்செயலை அதிபர் ராஜபக்சேவின் தலைமையில் இயங்கிவரும் ஐக்கிய மக்கள்
சுதந்திர கட்சியினரின் முழு துணை பலத்துடன் எதிர்வரும் கிழக்கு மாகாண
தேர்தலில் போட்டியிட இருக்கும் முன்னாள் விவசாயம் மற்றும் மீன்வள
மாகாணசபை அமைச்சர் நவரத்னராஜாவின் அணியினர் புரிந்துள்ளனர் என அக்கிராம
குடிமக்கள் சாடியுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று, செய்தியறிந்து அவ்விடம் விரைந்த மக்கள் அங்கே
இலங்கை காவல் அதிகாரியின் அடையாள அட்டையும் கைத்தொலைபேசியும்
கண்டெடுத்துள்ளனர்.
எனினும், சில நாட்களுக்கு முன்னர் தனது அடையாள அட்டையையும்
கைத்தொலைபேசியையும் இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றதாக
'விளக்கமளித்துள்ளார்' அவ்வதிகாரி. ஆனால், அதன் தொடர்பாக அவர்
எப்புகாரும் செய்யவில்லையென ஆதாரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
இன்னிலையில், இலங்கை காவல் துறை அதிகாரிகளுக்கும் இக்கோயில் அழிப்பில்
தொடர்பு உள்ளதென கிராம மக்கள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக