திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, மேற்படி சட்டமூலத்துக்கு எதிராக அணிதிரளும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மேற்படி சட்டமூலத்துக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம், மேற்படி சட்டமூலத்துக்கான அங்கீகாரம் மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், குறித்த சட்டமூலமத்திற்கான அங்கீகாரத்தினை மேல்;, வடமேல் மற்றும் ஊவா மாகாண சபைகள் வழங்கியுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ' இந்த சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாணத்துக்கு தெரிவான த.தே.கூ. உறுப்பினர்கள் 11பேருக்கும் நடத்தப்பட்ட கருதரங்கின் போது விளக்கமளிக்கப்பட்டது' என்றார்.
அத்துடன், இந்த சட்டமூலத்தின் மூலம் மத்திய அரசிற்கு மேலதிகமாக அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. இது அதிகாரப் பகிர்வுக்கு எதிராக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவை பெறவுள்ளீர்களா என வினவியதற்கு, ஐக்கிய தேசிய கட்சி எமக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது' என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக