தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாக கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டம் 'முடிவு' எதுவும் இன்றி முடிவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகியவற்றின் தலைவர்களான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வீ.ஆனந்தசங்கரி மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை.சேனாதிராஜா இந்தியா சென்றிருப்பதால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகின்றது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சர்வதேச அரங்கில் முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுவதால், பதிவை ஒரு பிரச்சினையாக்கி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என சம்பந்தன் இதன்போது தெரிவித்ததாக தெரிகின்றது.
இருந்தபோதிலும் சர்வதேச ரீதியாக எமது பிரச்சினை பேசப்படும் இன்றைய காலத்தில்தான் பதிவு அவசியம் அதன் மூலமாகவே கூட்டமைப்பை மேலும் பலப்படுத்த முடியும் என மற்றைய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியதை சம்பந்தன் கவனத்திற்கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.
இந்த நிலையில் தொடர்ந்தும் பேசுவோம் எனக் கூறி சம்பந்தன் கூட்டத்தை முடித்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முடிவு எதுவும் இன்று கூட்டமைப்புத் தலைவர்களின் நேற்றைய கூட்டம் முடிவுக்கு வந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக