திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதையும் செய்யும் போல் தெரிகிறது. அதேவேளை அச்சட்டமூலத்தை நாட்டு நலனுக்கான ஒன்று என்பதை விட மானப் பிரச்சினையாகவும் அரசாங்கத்தின் தலைவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றும்; தெரிகிறது.
திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கத்தின் தலைவர்கள் எதிர்நோக்கியதைப் போன்ற சிக்கலான பிரச்சினையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இதுவரை வேறெந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதிலும் எதிர்நோக்கியதில்லை. இது அரசாங்கத்தின் சில தலைவர்களை விரக்திக்கே இட்டுச் சென்றுள்ளது போலும்.இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கு முன் அதற்கு மாகாண சபைகளின் அனுமதியை பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் அதன்படி மாகாண சபைகளின் அனுமதியை பெறுவதற்காக வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை இல்லாததால் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலைமையுமே அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையாகும். இதனால் மாகாண சபைகளையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நிலைக்கு சில தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதனை நேரடியாகவே கூறியவர் எப்போதும் சுற்றி வளைக்காமல் பேசும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே. அண்மையில் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின் போது மாகாண சபைகளை தோற்றுவித்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தாமதமின்றி ரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் போருக்கு பின்னாலான அபிவிருத்தியை தடுப்பதாகவும் அவ் அபிவிருத்தியை தொடர்ந்தும் தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடமளிக்க முடியாது என்றும் கூறிய அவர், பேட்டியின் ஒரு கட்டத்தில் திவி நெகும சட்டமூலத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தனித்து கவனத்தில் எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கூறியிருந்தார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக அவர் குரல் எழுப்புவதற்கு திவி நெகும பிரச்சினையே அடிப்படை காரணம் என்பது இதனால் புலனாகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ ஓர் அரசாங்க அதிகாரி. தாம் அரசியல் விடயங்களை பகிரங்கமாக ஆராய்வது முறையல்ல என்ற பிரச்சினை எழலாம் என்பதால் தாம் இங்கே அரசியல் பேசவில்லை என்றும் அவர் அந்தப் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்னரும் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவை தளமாகக் கொண்ட ஹெட்லைன் டுடை செய்திச்சேவைக்கு கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அளித்த பேட்டியொன்றின் போதும் 'அதிகார பரவலாக்கல் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு அப்பால் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிது' என அவர் கூறினார்.
ஒன்றாய் வாழ்வதற்கு தற்போதைய அரசியலமைப்பு தலைக்கும் மேல் போதுமானது என்றும் இதற்கு மேல் எதுவும் வேண்டும் என்று தாம் நினைக்கவில்லையென்றும் அவர் அதில் கூறினார். ஆனால் இப்போது அவர் தற்போதைய அதிகார பரவலாக்கல் முறையையும் ரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதனை வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளன.
அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக்க ஹெல உருமய போன்ற கட்சிகளும் தேசபக்த தேசிய அமைப்பு போன்ற அமைப்புக்களும் இப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்;ய வேண்டும் என்று அறிக்கை விட தொடங்கியுள்ளன. 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வீரவன்ச இப்போது கூறி வருகிறார்.
இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால் இந்திய தலைவர்களின் அழைப்பின் பேரில் இம் மாத ஆரம்பத்தில் இந்தியாவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு புது டில்லியில் இருக்கும்போதே தான் பாதுகாப்புச் செயலாளர் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு இருந்தார்.
இவரது கருத்தை இந்திய தலைவர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ தெரியாது. ஏனெனில் இலங்கை தலைவர்கள் இதுவரை இந்திய தலைவர்களோடு கூறியவற்றுக்கு முரணாகவே கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து அமைந்துள்ளது. இந்திய தலைவர்களும் இலங்கைத் தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் இனப் பிரச்சினை ஆராயப்பட்டு வருகின்றது. அவ்வப்போதெல்லாம் இலங்கையில் தற்போது அமுலில் உள்ள அதிகார பரவலாக்கல் முறை பலப்படுத்தப்பட வேண்டும் என இந்திய தலைவர்கள் வலியுறுத்துவார்கள். இலங்கைத் தலைவர்களும் இணக்கம் தெரிவிப்பார்கள்.
தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் இவ்வாறு இந்த விடயத்தில் வாக்குறுதியளித்து வருவதாக இந்தியாவே இந்த வருட ஆரம்பத்தில் சுட்டிக் காட்டியிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் 16 முதல் 19ஆம் திகதி வரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஏம்.கிருஸ்ணா இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். அப்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸும் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகார பரவலாக்கல் துறையில் முன்னோக்கிச் செல்வதற்கான தமது ஆர்வத்தை இலங்கை அரசாங்கம் பலமுறை இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.தாம் அன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததாகவும் அவரும் இதை வலியுறுத்தியதாகவும் அவர் அந்த செய்தியாளர் மாநாட்டின் போது கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திவுக்கு விஜயம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போதும் வழமையான வலியுறுத்தல்களையும் உறுதிப்பாடுகளையும் இரு சாராரும் வழங்கினர்.
இதுபோன்று ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. மனித உரிமை பேரவை போன்றவற்றிலும் இலங்கை தலைவர்கள் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்துவதாக கூறி வந்துள்ளனர். அன்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளிலும் அதிகார பரவலாக்கல் முறை பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த சிபாரிசுகளை அமுலாக்குவதாகவே சர்வதேச சமூகத்திற்கு கூறி வருகிறது.போர் முடிவடைந்த உடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். 26ஆம் திகதி அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஓரிரு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என மீண்டும் கூறியிருந்தார்.
இந்தியா 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. இந்தியா 1987ஆம் ஆண்டு தமது விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் பலத்தைக் காட்டி ஏற்படுத்திய நெருக்குவாரத்தின் விளைவாகவே ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கம் அன்று 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர இணங்கியது. சுருக்கமாக இந்தியாவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகப் படுத்தியது எனலாம்.
இந்தப் பின்னணியில் தான் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான குரல் வலுப்பெற்று வருகிறது. எனவே உத்தியோக பூர்வமாக இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்ற விடயத்தில் என்ன செய்யும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் பல சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்ய முன்வருமா என்பது கேள்விக்குறியே. அதேவேளை அரசாங்கத்தினால் இந்தியாவையும் மறந்துவிட முடியாது.
அவ்வாறாயின் மேற்கூறிய நெருக்குவாரங்களின் காரணமாக அரசாங்கம் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமா என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். அதுவும் நடக்காது. முதலாவதாக, அரசாங்கத்தின் தலைவர்கள் இயல்பாகவே அதிகார பரவலாக்கலை விரும்பாதவர்களாவர். உலகுக்குத் தெரியவே அவர்கள் அதைப் பற்றிப் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்கள்;. மறுபுறத்தில் பெரும்பான்மை சமூகத்திற்குள் இருந்து அதிகார பரவலாக்கல் முறைக்கு எதிராக பலமாக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அதனையே சாதகமான நிலைமையாகவே பாவிப்பார்கள்.
எனவே மொத்தத்தில் தற்போதைய நிலைமை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் 'சும்மா' இருந்து காலத்தை கடத்த பொருத்தமான நிலைமையாகவே இருக்கிறது. அநேகமாக இந்த விடயத்தில் அரசாங்கம் தற்போதைக்கு எதுவும் செய்யாமல் 'சும்மா' இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதேவேளை 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளிருந்தே தற்போது எழுந்துள்ள குரல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனப் பிரச்சினை தொடர்பான உத்தேச நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் இழுக்கும் கருவியாகவும் அரசாங்கம் பாவிக்கலாம். அதாவது நீங்கள் வராவிட்டால் ஒன்றுமே இல்லாமல் போகலாம் என்ற செய்தியையும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான இந்த கொக்கரிப்புக்கள் மூலம் விடப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக