செவ்வாய், 13 நவம்பர், 2012

13ஆவது திருத்தத்தை மாற்றலாம்; ரத்து செய்ய முடியாது: ஐக்கிய தேசிய கட்சி.

13ஆவது திருத்த சட்டமூலத்தில் குறைகள் இருப்பின் திருத்த வேண்டுமே தவிர இரத்து செய்யக்கூடாது என மாகாண சபைக்கு இட்டுச் சென்ற 13ஆம் திருத்தத்தின் சிருஷ்டிகர்த்தாவான ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
மாகாண சபைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என அரசாங்கம் தீர்மானிக்குமாயின்இ அதற்கு பதிலாக மாற்று அதிகார பகிர்வு அலகொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
திருத்தப்பட வேண்டியப ல குறைபாடுகள் 13ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளன என அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தை மீறி மாகாண சபைகள் செயற்படுவதை தடுப்பதற்கு 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என அத்தநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி 13ஆவது திருத்தம் அவசரமாக கொண்டுவரப்பட்டது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
13ஆவது திருத்த சட்டமூலத்தில் சில மாற்றங்களை செய்ய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கும். ஆனால் அதை இல்லாமல் செய்ய ஒத்துக்கொள்ளாது என அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக