19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அpகாரம் பகிரப்பட உள்ளதாக தெரிவிக்;கப்படுகிறது. மாகாணசபை முறைமையை ரத்து செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் உத்தேச சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொண்ட இந்த வரைவுத் திட்டத்தின் குறைநிறைகள் பற்றி கருத்து வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை 19ம் திருத்தச் சட்டம் பதிலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்;தை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் வரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக