ஞாயிறு, 25 நவம்பர், 2012

இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண்களை விடுதலை செய்யவும்: குமரகுருபரன்

இராணுவத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட அப்பாவி தமிழ் யுவதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் குமரகுருபரன் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால்,இன்றுஇராணுவத்தில் பலவந்தமாகசேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். புலிகளினால் வாழ்க்கையை தொலைத்த அந்த பெண்களை இராணுவத்தில் சேர்த்தமை அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.
விரும்பி இராணுவத்தில் இணையும் பெண்களை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக