ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியாவிற்கு விஜயம் மேற்கொள்ள
மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல்வெளியிட்டுள்ளது.தவிர்க்கமுடியாத காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விஜயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.8வது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி முதல் 6ம்திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க அரசு அனுமதிக்க கூடாது என அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக