இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக உயர் இராணுவ அதிகாரி கெப்டரன் ரவீந்திர வதுர பண்டாரகே தெரிவித்துள்ளார். கெப்டன் ரவீந்திர தற்போது கனடாவில் புகலிடம் கோரியுள்ளார். இராணுவப்படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதாக கெப்டன் ரவீந்திர கனேடிய குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.38 வயதான கெப்டன் ரவீந்திர கடந்த 2009ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இராணுவத்திலிருந்து தப்பியோடி, கனடாவில் புகலிடமடைந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டில் வெடிபொருட்களை வைக்குமாறு இரர்ணுவ கேணல் ஒருவர் தமக்கு உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இதனால் தம்மை கொழும்பிற்கு இடமாற்றம் செய்யதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்திய விடயங்கள் பற்றிய தகவல்கள் தமக்குத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் துன்புறுத்தப்பட்டமை தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குங்பூ தற்காப்புக் கலை சாம்பியனான, கெப்டரன் ரவீந்திர பண்டாரகே 1993ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.போதைப் பொருள் மற்றும் பாலியல் தொழில் நடத்திய முக்கிய அசரியல்வாதி ஒருவர் பற்றிய தகவல்களை வெளியிட்ட காரணத்தினால் தமது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அதனால் கனடாவில் புகலிடம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், குறித்த இராணுவ அதிகாரியின் புகலிடக் கோரிக்கையை கனேடிய குடிவரவுத் திணைக்களம் கடந்த பெப்ரவரி மாதம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்களை வைக்குமாறு ஒரு அதிகாரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டால் அவர் நிச்சயமாக படையினருக்கு விசுவாசமானவராகவே இருக்க வேண்டுமென குடிவரவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே குறித்த இராணுவ அதிகாரியும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புகலிடம் வழங்குமாறு குறித்த இராணுவ உயரதிகாரி செய்த மேன்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக