வெள்ளி, 30 நவம்பர், 2012

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் அரசாங்கம் உதவியை எதிர்பார்ப்பதும் வெட்கம் - உலகநாடுகளது உதவிகளை தனது எனச் சொல்லிக் கொள்வதும் வெட்கம்:

News Serviceஇலங்கை அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளி விட்டு , தனது இராணுவ முன்னெடுப்புக்களினால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக வாழும் தமிழ் மக்களிடம் கையெந்தி உதவியை எதிர்பார்ப்பது வெட்கக் கேடான விசயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களுக்கான உதவிகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களே மேற்கொள்கின்றன , உலக நாடுகள் கொடுத்த உதவிகளை அரசாங்கம் தனது உதவிகள் எனக் கூறுவது வேடிக்கையானது.
அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களோ , அரசசார்பற்ற நிறுவனங்களோ உதவவில்லை என்று குற்றம் சுமத்தியதுடன் , இந்த அரசாங்கம் பெருமளவு நிதியொதிக்கி மீள்குடியேற்றத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. என்று கூறினார். அது மாத்திரமல்லாமல் மீள்குடியேறிய தமிழர்களுக்கு 25,000 /= பணமும் , சீமேந்து , தகரம் , விவசாய உபகரணங்கள் , நெல் விதைகள் , போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டதாக பட்டியலிட்டார் ஆனால் இது கடைந்தெடுத்த பொய்யாகும் . மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த மாவட்டங்களில் இறக்கி விடப்பட்ட மக்களுக்கு இந்திய அரசுதான் 8 தகரங்களையும் , 8 மூடை சீமேந்தும் கொடுத்ததே தவிர , இலங்கை அரசு இல்லை , அதே போன்று விவசாய நிலங்களை துப்பரவு செய்வதற்காக விவசாய உபகரணங்கள் என்ற அடிப்படையில் மண்வெட்டி , கத்தி , கோடரி உள்ளிட்ட கருவிகளையும் இந்தியா கொடுத்தது. அதே போன்று மெனிக்பாம் முகாமிலிருந்து அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான பொறுப்பை ஐ.ஓ.எம் நிறுவனம் ஏற்றிருந்தது , மீள்குடியேற்றக் கொடுப்பனவாக ரூ 25,000 /= வை அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானியகம் வழங்கியது , அதேவேளை சில உதவிகளை சில உள்ளூர் தொண்டு நிறுவனகளும் வழங்கியுள்ளன.

இதில் அரசு தனது நிதியிலிருந்து எத்தனை ரூபாயை செலவழித்தது ?

ஆகவே உலகநாடுகள் கொடுத்த உதவிகளை இலங்கை அரசாங்கம் தனது உதவிகள் எனச் சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது. அது மட்டுமன்றி இவ்வாறு ஐ.நா தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியை வட-கிழக்கைச் சேர்ந்த அமைச்சர்களும் , வட மாகாண ஆளுனரும் நேரடியாக இந்த மக்களிடம் கையளித்து , தாங்கள் கொடுத்ததாக மேற்கொண்ட விளம்பரங்களின் மூலம் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி அதனை தமது குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். ந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் வரிப்பணமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எமது வரிப்பணத்தைப் பயன்படுத்தியே எம்மைக் கொன்றொழித்த இந்த அரசாங்கம் எமது மக்களின் சிதைக்கப்பட்ட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு எமது வரிப்பணத்தில் எத்தனை ரூபாயை செலவழித்துள்ளது என்பதை தெரிவிக்க முடியுமா என சவால்விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக