ஐரோப்பாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு தரப்புக்களினால் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரன் பரிசில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிதி தரப்பினருக்கும், ஏனைய தரப்பினருக்கும் இடையிலான உட்பூசலே இந்த மரணத்திற்கான காரணம் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தின நிகழ்வுகளை பரிசில் நடத்துவது தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இந்தக் கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் தின நிகழ்வுகளை பொதுவானதாக நடாத்த ருத்ரகுமாரன் தரப்பினரும், நெடியவன் தரப்பினரும் இணங்காமையே இந்த முரண்பாடுகளுக்கான காரணம் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் ஐரோப்பிய பிராந்திய நாடுகளுக்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தல் என்பதனை அம்பலமாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக