செவ்வாய், 6 நவம்பர், 2012

உலக நாடுகள் இலங்கையை நோக்கும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: ஜீ.எல்.பீரிஸ்

News Service


பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சில சர்வதேச அமைப்புக்கள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


உண்மை நிலைமைகளை புரிந்து கொள்ளாமலேயே சில நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு விரோதமான வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது பற்றி கூட அறிந்து கொள்ளாமல் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் இலங்கையை நோக்கும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் சகல சட்டங்களையும் பின்பற்றியே நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக