நில அளைவத் திணைக்கள அதிகாரி கொலை தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபா சன்மானம் வழங்க பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.நில அளைவத் திணைக்களத்தின் அதிகாரியான நாமல் அஜந்த என்பவர் அண்மையில் மன்னாரில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத தொடர்பிலான விளம்பர சுவரொட்டிகள் மன்னார் மாவட்டத்தில்ஒட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக