திங்கள், 17 டிசம்பர், 2012

படைப்பலத்தை வைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டால், லிபியாவில் ஏற்பட்ட நிலைமையே இலங்கையிலும் ஏற்படும்: ராஜித

படைப்பலத்தை வைத்துக்கொண்டு எந்தப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது. அரசியல் ரீதியான அனுகுமுறைகள் மூலமே பிரச்சினைகளுக்கான நிநந்தர தீர்வினை எட்டமுடியும் என கடற்றொழில் நீரியியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளிநொச்சி பூநகரி இரனைமாதா நகரில் கடலுணவு பதனிடல் நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்த நாட்டில் நிலவுகின்ற நீண்ட கால பிரச்சினைக்கு நல்லதொரு அரசியல் வழிமுறைகள் மூலமே நல்ல தீர்வினை காணவேண்டும் எனவும் லிபியாவில் ஏற்பட்ட பிரச்சினையில் அந்நாட்டு படைகளினால் லிபியத்லைவர் கடாபியினை காப்பாற்ற முடியாமல் போனமையினையும் சுட்டிக்காட்டினார். மேலும் இனவாதங்கள் பேசிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களையும் நாட்டினையும் அழிவுக்கு இட்டுச் செல்வது நல்லதல்ல எனக் குறிப்பிட்ட அவர் தான் இனவாதத்திற்கு ஏதிரானவன் என்பதோடு இனவாத்திற்கு ஏதிராகவே குரல் கொடுத்தும் வந்தவன் என்ற காரணத்தினாலும் இந்த நாட்டில் காணப்பட்ட இரண்டு இனவாதிகளின் குண்டுகளை இன்றும் உடலில் சுமந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.


சிங்கள இனவாதிகளான ஜேவிபிகளின் குண்டினையும் ,தழிழ் இனவாதிகளான புலிகளின் குண்டினையும் தனது உடல் தாங்கிக்கொண்டிருப்பதாகவும் இனவாதம் எதற்கும் சிறந்த வழியல்ல எனவும் தென்பகுதியிலும் வடபகுதியிலும் காணப்பட்ட இனவாதங்கள் காரணமாகவே இந்நாட்டில் பலர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்தார். எனவே நான் எப்பொழுதும் இனவாத்தினை முற்றாக எதிர்க்கின்றேன் அதுக்கு எதிராகவும் செயற்படுகின்றேன் இதன் காரணமாக நான் சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுவதாக தெற்கிலுள்ள சிலர் கூறிவருக்கின்றனர் இருப்பினும் நான் இவற்றுக்களை ஒரு போதும் கண்டுகொள்ளபோவதில்லை. அனைத்து மக்களும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் குறிப்பிட்டார். இரனைமாதாநகர் கடற்றொழில் சங்கத்தலைவர் ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் திருமதி. மதுமதி, பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களான நோயல், காசிம், பளை பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன், உதவி பொலீஸ் அத்தியட்சர் எட்வின் மகேந்திரா, கடற்றொழில் நீரியல்வளத்துறை கிளிநொச்சி மாவட்ட உதவி ஆணையாளர் இரவீந்திரன், ,ஜ.எல்.ஓ. நிறுவன பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக